
இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கரோனாஉறுதி செய்யப்படுபவர்களின்எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. இதனால்பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன்முதலில் கரோனா பரவியபோது, பிரதமர் மோடிஊரடங்கை அமல்படுத்தினார்.
அப்போது பொதுமக்களைதீபம் ஏற்றுமாறும், கைகளைத் தட்டி ஓசை எழுப்புமாறும் மோடி வலியுறுத்தினார். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த முறை ஊரடங்கின்போது பிரதமர் மோடி செய்யச்சொன்னவற்றைக் குறிப்பிட்டு, மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
திட்டமிடப்படாத ஊரடங்கால், பொருளாதாரம்பாதித்துவிட்டதாகதொடர்ந்து விமர்சித்து ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வியூகம்:- முதற்கட்டம் -துக்ளக் ஊரடங்கை அமல்படுத்துதல்;இரண்டாம் கட்டம் - மணி ஓசையை எழுப்புதல்;மூன்றாம் கட்டம் -கடவுளைத் துதித்து பாடுதல்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)