Rahul Gandhi Priyanka Gandhi arrested

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஜிஎஸ்டி வரி அதிகரிப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையில் அந்தப் பேரணி நடந்தது.

Advertisment

நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் வந்து கொண்டிருந்த நிலையில், அவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் குறுக்கிட்டதால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisment

அதேபோல, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணி செல்ல முயன்ற பிரியங்கா காந்தி மற்றும் அவருடன் இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.