Skip to main content

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டிற்கு முதல் விமான சேவை தொடக்கம்!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
sp

 

புதுச்சேரி விமான நிலையம் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு  முன்பு இந்த விமான நிலையம் தொடங்கப்பட்டது.   ஆரம்ப காலத்தில் சிறிய வகை விமானங்கள் புதுச்சேரியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் வரவேற்பு குறைந்த காரணத்தால் 3 முறை விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு தனியார் (ஸ்பைஸ் ஜெட்) நிறுவனம் சார்பாக விமான சேவை தொடங்கப்பட்டு  இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய முயற்சியாக வெளிநாட்டு விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டது.  

புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் வழியாக தாய்லாந்து நாட்டின் தலைநகரான  பேங்காங்கிற்கு தினசரி சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

 

ஸ்பைஸ்ஜெட்  தனியார் நிறுவனம் இச்சேவையை புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து செய்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து காலை  11.45 மணிக்கு புறப்படும் விமானம் ஐதராபாத் நகருக்கு மதியம் 1.20 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் விமானம் பேங்காங் நகருக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடைகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

போர் விமானத்தில் பறந்த மோடி

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 Modi flew in a fighter jet

 

பிரதமர் மோடி போர்  விமானத்தில் பயணித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்திய போர் படையில் இருக்கும் தேஜஸ் எனும் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். விமான போர் படையின் சீருடை அணிந்தபடி ஜெட்டில் ஏறிய பிரதமர் மோடி, கையசைத்தபடி உற்சாகமாக பயணம் செய்யும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த பயணம் குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது' என தெரிவித்துள்ளார்.

 

 

 

Next Story

“பிரதமர் மோடி பிறந்தநாள் வேலையின்மை தினம்” - புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ்  

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

“Prime Minister Modi Birthday Unemployment Day” - Puducherry Youth Congress

 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினமாக கடைப்பிடித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று (செப்.17ம் தேதி) பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். 

 

இந்நிலையில், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை முன்பு திரண்ட புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார், கோஷங்களை எழுப்பினர். மேலும், டீ, பக்கோடா, சமோசா ஆகியவற்றை விற்று தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பா.ஜ.க. அரசு ஜி20 மாநாட்டுக்கு ரூ. 4000 கோடி, புதிய நாடாளுமன்ற கட்ட ரூ. 20,000 கோடி என செலவு செய்துவிட்டு, நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல்; தனது நண்பர் அதானிக்கு சலுகை வழங்குகிறது” என்று பேசினார்.