Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து!

Published on 14/01/2022 | Edited on 14/01/2022

 

Prime Minister Narendra Modi wishes Pongal in Tamil!

 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையும், வட மாநிலங்களில் மகர சங்கராந்தியையும், மக்கள் வழக்கான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

 

பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்" என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழுக்கு மரம் ஏறும் போட்டி; தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
slippery tree climbing competition; Falling young man lose thier live

பொங்கல் திருநாளை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர். தை மாதம் முழுவதும் கோலாகலமாகவே இருக்கும். அதேபோல் பல ஊர்களில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வழுக்கு மரம் ஏறுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான போட்டி. உயரமான கம்பத்தின் உயரத்திற்கு ஏற்ப வீரர்களின் எண்ணிக்கையும் அமையும். கிரீஸ், எண்ணெய் தடவிய வழுக்கு மரத்தின் உச்சியில் உள்ள பணமுடிப்பை எடுக்க ஒருவர் மீது ஒருவராக 5 முதல் 7, 8 பேர்கள் வரை ஏறி எடுக்க அனுமதிக்கப்படுவர்.

கயிறு வழியாக ஏறக்கூடாது, சட்டை அணிந்து ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். 50 அடி உயரம் கொண்ட மரங்களில் கூட குழுவாக ஏறி பரிசுத் தொகையை எடுத்துச் செல்வது வழக்கம். இதேபோல ஆலங்குடி அருகே உள்ள சம்மட்டிவிடுதி கிராமத்தில் அங்குள்ள பள்ளி வளாகத்தில் இளைஞர்கள் சார்பில் நேற்று மாலை வழுக்கு மரம் நடப்பட்டு தயாராக இருந்தது. அதே ஊரைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார் (38) வழுக்கு மரம் சாயாமல் இருக்க பாதுகாப்பிற்காக இழுத்து கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றில் ஏறியபோது கீழே நின்றவர்கள் கூச்சல் போட்டு இறங்கச் சொன்னதையும் கேட்காமல் மரத்தின் உச்சியைத் தொட முயன்றபோது தவறி கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றி கிடந்தவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து சம்மட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

காணும் பொங்கல் கொண்டாட்டம்; கடலூரில் சுற்றுலாத்தலங்களில் திரண்ட மக்கள்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Celebrating Pongal to see; Crowds at tourist spots in Cuddalore

கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி கோவில்கள், சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் குவிந்து பொழுதுபோக்கு அம்சங்களின் ஈடுபட்டனர். கடலூர் வெள்ளிக்கடற்கரையில் புதன் கிழமை மாலை கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்துனர். பின்னர் கடல் அலையின் அழகை ரசித்தனர். அங்கு மாவட்ட நிர்வாகத்தினால் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரியையும் கண்டு களித்தனர். மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதித்துள்ளது.

இதுபோல  கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மலையில் பிரசித்தி பெற்ற புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதுபோல சிதம்பரம் அருகே உள்ள பிச்சாரம் சுற்றுலா மையத்தில் காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை, சேலம், புதுச்சேரி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சுரபுன்னை காடுகளின் அழகை ரசித்த வாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த அண்ணாமலை நகர், சிவபுரி, பெராம்பட்டு, வல்லம்படுகை, நடராஜபுரம் குமாரமங்கலம்  உட்பட  பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்தனர். கோவில் வெளி பிரகாரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரங்கால் மண்டம் அருகே உள்ள பகுதியில்  பெண்கள் பல குழுக்களாக பிரிந்து கும்மி அடித்தும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இளம் பெண்கள் கோகோ, கபடி விளையாடினர். கிராமப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மதிய உணவை எடுத்து வந்து உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டமாக அமர்ந்து  உண்டனர். பல்வேறு சிலம்ப பயிற்சி மையம் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சிலம்பம் விளையாடினர். மல்லர் கம்பம், இளவட்டம் கல் தூக்குவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து. ஆயிரக்கணக்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் இதனைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.