ஐ.நா. பொதுச்சபையின் 76- வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய தகவல் தொழில் நுட்பத்தை இந்தியாவில் பயன்படுத்துவது, அவர்களுடன் பிரதமர் ஆலோசித்தார்.
அதைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி இன்று (24/09/2021) காலை இந்திய வம்சாவளியும், அமெரிக்காவின் துணை அதிபருமான கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லைப் பிரச்சனை, இருதரப்பு உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வணிகம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தகவல் கூறுகின்றன.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடனை முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாகச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.