Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனி செல்கிறார்! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
Prime Minister Narendra Modi leaves for Germany today!

 

சுற்றுச்சூழல்,எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம்,பயங்கரவாத ஒழிப்பு, ஜனநாயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜி- 7 மாநாட்டில் விவாதிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

 

48வது ஜி- 7 உச்சி மாநாடு நாளையும் (26/06/2022), நாளை மறுதினமும் (27/06/2022) ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில், அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, இன்று (25/06/2022) ஜெர்மனி செல்கிறார். மாநாட்டையொட்டி, பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப் போவதாகத் தெரிவித்தார். 

 

ஜெர்மனியைத் தொடர்ந்து, ஜூன் 28- ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் செல்லும் பிரதமர், அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத்தை சந்திக்கவுள்ளார்.  


சார்ந்த செய்திகள்