Skip to main content

அமித்ஷா காரை வழிமறித்த கல்லூரிமாணவி முடியை பிடித்து இழுத்து சென்ற போலீசார்- வைரல் வீடியோ இணைப்பு

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
girl

 

 

 

அலகாபாத்தில் பாஜக தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது அவர் வருகைக்கு எதிராக கோஷமிட்ட கல்லூரி மாணவியை ஆண் போலீசார்கள் முடியைபிடித்து இழுத்து சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

 

அலகாபாத்தில் பல இடங்களில் பாஜக தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று அங்கு சில இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அமிதாஷா கார் அணிவகுப்புடன் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று ''கோ பேக் அமித்ஷா'' என்ற முழக்கத்துடன் கல்லூரி மாணவி இருவர் மற்றும் ஒரு கல்லூரி மாணவனும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வரிசையாக வந்துகொண்டிருந்த கார் முன்பு போலிஸாரின் தடையை மீறி உள்ளே புகுந்த அந்த மாணவிகள் தொடர்ந்து எதிர்  கோஷங்களை எழுப்பி காரை வழிமறித்தனர்.

 

 

இதனை  சுதாரித்துக்கொண்ட போலீசார் மூவரை பிடித்து தரதரவென இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர். அந்த மாணவிகளில் வெள்ளை நிற ஆடை உடுத்தியுள்ள மாணவியை  கைது செய்யும் பொழுது முடியை பிடித்து ஆண் காவலர் ஒருவர் வண்டியில் ஏற்றிய வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.