Skip to main content

புதிய அமைச்சரவையில் 15 பேர் கேபினட் அமைச்சர்கள்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

 

pm narendra modi cabinet ministers oath swearing in ceremony

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

கேபினட் அமைச்சர்கள் யார்? யார்?
1.நாராயன் ரானே, 
2.சர்பானந்த சோனாவால்,
3.வீரேந்திர குமார், 
4.ஜோதிராதித்ய சிந்தியா,
5.ராமச்சந்திர பிரசாத் சிங்,
6.அஷ்வினி வைஷ்ணவ்,
7.பசுபதிகுமார் பாரஸ், 
8.கிரண் ரிஜிஜூ,
9.ராஜ்குமார் சிங்,
10.ஹர்தீப்சிங் புரி,
11.மன்சுக் மாண்டவியா,
12.பூபேந்தர் யாதவ்,
13.பர்ஷோத்தம் ரூபாலா,
14.கிஷன் ரெட்டி,
15.அனுராக் தாக்கூர்.


அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் உட்பட 28 பேர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.

   

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story

‘மிக்ஜாம்’ புயல் நிவாரணப் பணி; முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

'Miqjam' storm relief mission; Chief Minister M. K. Stalin's action order

 

‘மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாகச் சென்னை நகரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து கடந்த 4 ஆம் தேதி (04.12.2023) தமிழக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன், கூடுதல் அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி அமைச்சர் எஸ். ரகுபதி கே.கே. நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும், அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ராயபுரம் பகுதிக்கும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுடன் கூடுதலாக அரும்பாக்கம் பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அதே சமயம் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்புப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவையும் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.