Skip to main content

கரோனா மூன்றாவது அலை - பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

pm modi

 

இந்தியாவில் கரோனா  இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துவருகிறது. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் கரோனா மூன்றாவது அலை தொடங்கும் எனவும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

கரோனா இரண்டாவது அலையின்போது கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தநிலையில் இன்று (09.07.2021) பிரதமர் மோடி, நாட்டில் ஆக்சிஜன் இருப்பு குறித்தும் ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவது குறித்தும் ஆலோசிக்க உயர்மட்ட குழு கூட்டத்தைக் கூட்ட இருக்கிறார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டம், கரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படுகிறது. இன்று காலை 11.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்