Published on 28/09/2021 | Edited on 28/09/2021
சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (28/09/2021) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
காணொளி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட வளாகத்தைத் திறந்துவைக்கிறார். அத்துடன் தேசிய வேளாண் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதுகளையும் வழங்குகிறார். மேலும், சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் சிறப்பு பண்புகளைக் கொண்ட 35 பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பருவநிலை எதிர்வினை தொழில்நுட்பங்களைப் பின்பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.