Skip to main content

"நாட்டின் ஒற்றுமைதான் முன்னுரிமை" - சவுரி சவுரா நூற்றாண்டு நிகழ்வில் பிரதமர் மோடி உரை!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

pm modi

 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான ஒரு நிகழ்வு சவுரி சவுரா. நூறாண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகருக்கு உட்பட்ட சவுரி சவுரா என்ற இடத்தில், ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் மீது, ஆங்கிலேய போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

 

இதனையடுத்து, ஆத்திரமடைந்த இந்தியர்கள், காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 போலீஸார் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 228 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் 6 பேர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த நிலையில், 172 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது இந்தியர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேல்முறையீட்டில், 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு 110 பேருக்கு வாழ்நாள் சிறையும், மற்றவர்களுக்கு நீண்டநாட்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 

 

இதற்கிடையே சவுரி சவுராவில் போராட்டக்காரர்கள், காவல்நிலையத்தைக் கொளுத்தியதைக் கண்டித்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காந்தியின் இந்த முடிவு இன்றுவரை ஒரு தரப்பால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த சவுரி சவுரா நிகழ்வு நிகழ்ந்து நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி, சவுரி சவுரா நிகழ்வின் நூற்றாண்டை ஒரு வருடம் முழுவதும் கொண்டாட உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (04.02.2021) தொடங்கி வைத்து, காணொலி வாயிலாக உரையாற்றினார்.

 

பிரதமர் மோடி ஆற்றிய உரை: 

 

"சவுரி சவுரா சம்பவம் ஒரு காவல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்டதோடு முடியவில்லை. சம்பவத்தின் செய்தி மிகப்பெரியது. பல்வேறு காரணங்களால், இது சிறிய சம்பவமாக கருதப்பட்டது, ஆனால் நாம் அதை அந்தச் சூழலில் பார்க்க வேண்டும். நெருப்பு காவல் நிலையத்தில் மட்டுமல்ல, மக்களின் இதயத்திலும் இருந்தது. சவுரி சவுரா சம்பவத்தின் தியாகிகள் பேசப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு பேசப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. வரலாற்றின் பக்கங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, ஆனால் அவர்களின் இரத்தம் நாட்டின் மண்ணில் உள்ளது. நமக்கு உத்வேகமளிக்கிறது.

 

நாட்டின் முன்னேற்றத்திற்குப் பின்னால் விவசாயிகள் உள்ளனர். சவுரி சவுரா போராட்டத்திலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். கடந்த ஆறு ஆண்டுகளில், விவசாயிகள் தற்சார்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கரோனா தொற்றின்போது கூட விவசாயத் துறை வளர்ந்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு மண்டிகள் லாபகரமானதாக இருக்க, மேலும் 1,000 மண்டிகள் இணைய வழியிலான தேசிய விவசாய சந்தையில் இணைக்கப்படும். நாட்டின் ஒற்றுமைதான் நமது முன்னுரிமை. எல்லாவற்றிற்கும் மேலாக அதை மதிக்க வேண்டும் என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்த உணர்வோடு, இந்தியாவின் ஒவ்வொரு மக்களோடு நாம் முன்னேற வேண்டும்".

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 PM Modi says Opposition parties will regret the Supreme Court verdict at electoral bond

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவானது, தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் உள்ள மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. 

அந்த வகையில், இந்தியா முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் நீங்கள் பணத்தின் வழியைப் பெறுகிறீர்கள். எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? அதனால்தான் நான் சொல்கிறேன், இனியாவது எதிர்க்கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வெண்டும். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருந்தும்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற சட்டங்கள் ஏன் அரசால் கொண்டு வரப்படவில்லை. மாறாக, தேர்தல் கமிஷன் சீர்திருத்தங்கள் என அரசால் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தேர்தல் கமிஷனர்களாக்கப்பட்டனர். அந்த அளவில் எங்களால் விளையாட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எங்களின் அர்ப்பணிப்பு. நாட்டில் பலர் களமிறங்கியுள்ளனர். மிகவும் நேர்மறையான மற்றும் புதுமையான பரிந்துரைகள் வந்துள்ளன. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு நிறைய நன்மை கிடைக்கும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில், ஒரு வார்த்தையில் எந்த அர்ப்பணிப்பும் பொறுப்பும் இல்லை. ராகுல் காந்தியின் ஒவ்வொரு எண்ணமும், முரண்படும் பழைய வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும்போது, ​​இந்தத் தலைவர் பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறார்கள். சமீபத்தில், ஒரு அரசியல்வாதி ‘வறுமையை ஒரே அடியில் அகற்றுவேன்’ என்று சொல்வதைக் கேட்டேன். 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருக்க வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படிச் சொல்லும்போது, ​​இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று நாடு நினைக்கிறது?” என்று கூறினார்.