Skip to main content

'பெகாசஸ் ஸ்பைவேர்' மென்பொருள் குறித்து பார்ப்போம்!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Pegasus Spyware software issues in parliament

 

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தில் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவுப் பார்க்கப்பட்டதாக புயல் கிளம்பி இருக்கிறது. இந்த ஸ்பைவேர் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

 

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம் ஸ்பைவேர் பெகாசஸ் என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளது. இதனை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை வேவுப் பார்க்கக்கூடிய மென்பொருள். இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்ஃபோனில் ஒரு தொடுதலும் இல்லாமலே ஊடுருவி தனிப்பட்ட தகவல்களைப் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபோனில் இருக்கும் 'BUG' மூலம் பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளே நுழைந்து விடும் (அல்லது) இது காத்திருக்கும் லிங் எதையாவது ஒருவர் கிளிக் செய்வதன் மூலமும் உள்ளே நுழைந்து விடும். ஐ.ஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதள ஃபோனில் பெகாசஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்கவும், மெசேஜ்களைப் படிக்கவும் முடியும். ஃபோன் கேமரா மற்றும் மைக்கை அவருக்கு தெரியாமலேயே இயக்கவும் முடியும். ஜி.பி.எஸ்.சை தானாகவே இயக்கி, நகர்வுகளைக் கண்காணிக்க முடியும். எண்ட் டூ எண்ட் என்க்ஸ்ரிப்ட் எனப்படும் குறியாக்கம் செய்த தகவலைக் கூட பெகாசஸ் பார்க்க முடியும்.

 

ஊடுருவ வேண்டிய செல்ஃபோனை அடையாளம் கண்டதும், இலக்கு உரிய நபரை தனது முயற்சிக்கு வரவழைக்க வலைத்தள இணைப்பை அனுப்புவர். குறிப்பிட்ட நபர் அந்த லிங்கை கிளிக் செய்ததும் அவரது ஃபோனில் பெகாசஸ் இன்ஸ்டால் ஆகிவிடும் (அல்லது) வாட்ஸ் ஆப் கால்களில் உள்ள 'BUG' வழியாகவும் ஊடுருவல் நடைபெறும். மிஸ்டுகால் அனுப்பியும் ஃபோனில் இன்ஸ்டால் செய்ய முடியும். அழைப்பு பட்டியலில் இருந்து அந்த எண் நீக்கப்படுவதால், அதுபற்றி பயனருக்கு நடந்த விஷயம் தெரியாது. பெகாசஸ் ஸ்பைவேர் புதிதல்ல. 2016- ல் ஐஃபோன் பயனர்களை இது குறி வைப்பதாகக் கூறப்பட்டது. 

 

பிறகு, 2019- ல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதை உளவு பார்க்க பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. ஆனால், அப்போது அரசால் அந்த தகவல் மறுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்கள், "சதித்திட்டம் தீட்டுபவர்களை உளவு பார்க்க மட்டுமே இந்த ஸ்பைவேர் உருவாக்கி நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. பெகாசஸ் மூலம் மனித உரிமை மீறல்களில் அரசுகள் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதம் பெறுவதாகக் கூறுகிறது" என்.எஸ்.ஓ.நிறுவனம் கூறுகிறது. 

 


  

   A

சார்ந்த செய்திகள்