இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 71வதுபிறந்தநாள் நேற்று (17.09.2021) கொண்டாடப்பட்டது. பிரதமரின் பிறந்தநாளையொட்டி நேற்று அதிக அளவில் கரோனாதடுப்பூசிகளைசெலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படியே இந்தியாவில் நேற்று 2.5 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது இந்தியாவில் ஒரேநாளில்செலுத்தப்பட்டஅதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கையாகும். இந்த சாதனையையொட்டிபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று சாதனை எண்ணிக்கையில் செலுத்தப்பட்ட தடுப்பூசி குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படலாம்" என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்ராகுல் காந்தி, கரோனாதடுப்பூசி செலுத்துதலில்நேற்று காட்டப்பட்ட வேகம் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2.1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்படும் மேலும் பல நாட்களைக் காணகாத்திருக்கிறேன். இந்த வேகமே நாட்டுக்குத் தேவை" என தெரிவித்துள்ளார்.