Published on 14/10/2021 | Edited on 14/10/2021
குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் நிலையில், நவம்பர் மாதம் முதல் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர் அமைப்புகள் கூறுகின்றன.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்கியுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டெல்லியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் எனவும், இதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள், ஓய்வு பெறும் வயது வரையிலும், வேறு பணிக்கு மாற்றலாகும் வரையிலும் தங்களை குடியிருப்புகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.