மத்திய அரசின்வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்றுடிராக்டர்பேரணி நடத்தியவிவசாயிகள், அதனைத்தொடர்ந்து சாலை மறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து டெல்லிஎல்லையில் முகாமிட்டுள்ள அவர்கள், வேளாண் சட்டங்களைமத்திய அரசு திரும்பப் பெறும்வரை வீட்டுக்குச் செல்வதில்லை என்ற முடிவில்விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள், மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜஸ்தானில் நடைபெற்றவிவசாயிகள் பேரணியில்பேசியராகேஷ்திகைத், நாடாளுமன்றதைநோக்கி நடத்தப்படும் பேரணியில், 40 லட்சம் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "பாராளுமன்றத்தை நோக்கியபேரணியேநமதுஅடுத்த முடிவாக இருக்கும். வேளாண்சட்டங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால் 4 லட்சம் டிராக்டர்கள் மட்டுமல்ல, 40 லட்சம் டிராக்டர்களும் அங்கு செல்லும்" எனத் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர்பேரணியில்வன்முறை வெடித்ததுகுறிப்பிடத்தக்கது.