நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக அமெரிக்காவில் ஒருவாரகால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த ஹவுடி மோடி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெக்ஸாஸ் மாகாண உறுப்பினர்(Senator) ஜான் கெனின் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் ஜான் கெனின் உடன் உரையாற்றும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோடி, அவரது மனைவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘நான், உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும். என்னை மன்னித்துவிடுங்கள். ஏனென்றால், இன்று உங்களுக்குப் பிறந்தநாள். உங்களுடைய கணவர், இன்று உங்களுடன் நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியிருப்பீர்கள். ஆனால், அவர் என்னுடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அது, உங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தலாம். அழகான வாழ்க்கைக்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தெரிவித்தார். பிரதமர் மோடி வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.