இந்தியாவின் சில குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள, அண்டை நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் குறிப்பிட்ட 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
1995, 2009 ஆகிய ஆண்டுகளில் வரையறுக்கப்பட்ட இந்தியக் குடியரிமைச் சட்ட விதிகளின்படி இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படமால் இருக்கும் நிலையில், இந்தியக் குடியரிமைச் சட்டம் 1995, 2009 ஆண்டின் குடியுரிமை விதிகள் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.