"உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எதிரான மேகதாது அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று (18/06/2021) பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவை அடுத்து மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுமான பணிகள் தொடங்கும். மேகதாது அணை கட்டுமானம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டம். மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு அளித்த கோரிக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். பெங்களூருவில் குடிநீர் தேவையும் பூர்த்திக் செய்யப்படும். ஆனால் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.