manmohan singh

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று (13.10.2021) மாலை காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங்கின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்மன்சுக் மாண்டவியா, இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மன்மோகன் சிங்கை பார்த்ததோடு, அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Advertisment

இதற்கிடையே பிரதமர் மோடி, "டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் உடல்நலத்திற்காகவும், அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.