இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதல்வர் மம்தாவும், பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரு அணியில் திரட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்திக்க டெல்லி சென்றுள்ள மம்தா, இன்று காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத்தையும், ஆனந்த் ஷர்மாவையும் சந்தித்தார். இதற்கிடையே பிரதமர் மோடியையும் மம்தா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தடுப்பூசி பற்றாக்குறை, மத்திய அரசு மேற்குவங்கத்திற்குத் தர வேண்டிய வரி பாக்கி உள்ளிட்ட விவகாரங்களை பிரதமரிடத்தில் மம்தா எழுப்புவார் என திரிணாமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்குவங்க முதல்வர் மம்தா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.