Skip to main content

கேரளா பெண்ணின் தற்கொலைக்கு காரணமான கணவனின் கடிதம்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

'' Your price is just 2,500 ... '' - Letter due to kerala woman's issue

 

கடந்த 2 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை காரணமாக கேரளாவில் தொடர்ந்து இளம்பெண்கள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அதிலும் தற்கொலை செய்துகொள்பவர்கள் எல்லாருமே படித்த பட்டதாரிகள் என்பதுதான் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா கிழமாட்டு எடயப்பூரம் பகுதியைச் சேர்ந்த தில்ஷத் சலீம் - பர்ஹானா தம்பதியினரின் மகள் மோபியா பர்வீன் (21). தொடுபுழையில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்துவந்தார். இவருக்கும் இருமல்லூரைச் சேர்ந்த யூசுப் - ருஹியா தம்பதியினரின் மகன் முகம்மது சுகைகல் என்பவருக்கும் இடையே ஃபேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டு, அது நட்பாக மாறி, கடைசியில் காதல் ஏற்பட்டது. அதன்பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் ஃபேஸ்புக் நட்பு கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணத்தில் முடிந்தது.

 

திருமணத்திற்கு முன்பு, முகம்மது சுகைல், தான் திருமணம் முடிந்ததும் அமெரிக்கா செல்ல இருக்கிறேன் என்று பெண் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். அதனால், மோபியா பர்வீனி பெற்றோர் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், திருமணம் முடிந்த பிறகுதான் முகம்மது சுகைல் அமெரிக்கா செல்லப் போவதாக கூறியது பொய் என்றும், எந்த ஒரு வேலையும் இல்லாமல் ஊர் சுற்றித் திரிவதும் தெரியவந்தது. இது மோபியா பர்வீனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

kerala

 

மேலும் முகம்மது சுகைல், “நான் சினிமா படம் எடுக்கப் போகிறேன். அதற்கு 40 லட்சம் தேவைப்படுவதால் கூடுதல் வரதட்சணையாக உனது வீட்டில் இருந்து அந்தப் பணத்தை வாங்கி வா” என கேட்டு அடிக்கடி மோபியா பர்வீனை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அந்தக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால் மோபியா பர்வீன் ஆலுவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், இன்ஸ்பெக்டர் சுதீர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மோபியா பர்வீனை தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

 

இதனால் மன வேதனையடைந்த மோபியா பர்வீன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு பெற்றோரிடம் தனக்கு நடந்த வரதட்சணை கொடுமை பற்றி எதுவும் கூறாமல் சோகத்திலேயே இருந்துள்ளார். இந்தநிலையில்தான், வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததோடு, போலீஸ் இன்ஸ்பெக்டரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள் கூறுகையில், ''இதற்கு முன் சுகைல் எங்கள் மகளிடம் 'முத்தலாக்' சொல்லியிருந்தான் அதனால் எங்களது மகள் மனமுடைந்து காணப்பட்டார். முத்தலாக் எல்லாம் தடை செய்து விட்டார்கள் என கூறி எனது மகளுக்கு தொடர்ந்து ஆறுதல் சொல்லிவந்தோம். மகளின் உடலில் டாட்டூ குத்தி கொடுமைப்படுத்தியுள்ளான். இறுதியாக சுகைல் என் மகளுக்கு எழுதிய கடிதத்தில் உன்னுடைய விலை வெறும் 2,500 ரூபாய்தான் என கேலி செய்து எழுதியிருந்ததைத்தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கடிதமும் வார்த்தையும்தான் அவளை தற்கொலை முடிவுக்குத் தள்ளியுள்ளது'' என்றனர்.

 

இச்சம்பவம் ஆலுவாவை தாண்டி எர்ணாகுளம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, க்ரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி முகம்மது சுகைல் மற்றும் அவருடைய பெற்றோர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடவடிக்கை எடுக்காத ஆலுவா காவல் நிலைய ஆய்வாளர் சுதீர் மீது ஏராளமான புகார் உள்ளதாகவும், ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காதது குறித்து கேரள காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கேரள பெண்கள் ஆணையத்தின் தலைவர் சதிதேவி கூறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.