Skip to main content

இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வர பெண்கள் பட்டியல்...

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

kotak mahindra and hurun list of top 100 women billionaire

 

 

இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வர பெண் தொழிலதிபர்களின் பட்டியலை கோடக் வெல்த் ஹுருன் வெளியிட்டுள்ளது. 

 

கோடக் மஹிந்திரா வங்கியின் ஒரு பிரிவான கோடக் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வர பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2020 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி பெண்களின் நிகர சொத்துமதிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி இந்தியாவின் மிகப்பெரிய பெண் கோடீஸ்வரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 54,850 கோடி ரூபாய் ஆகும்.

 

இவருக்கு அடுத்த இடத்தில், 36,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பயோகானின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார்-ஷா இடம்பெற்றுள்ளார். யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் தலைவர் லீனா காந்தி திவாரி 21,340 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த ராதா வேம்பு 11,590 கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் சோஹோ (zoho) நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை தன வசம் வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் அம்பானி

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

 Ambani becomes Asia's richest man!

 

தொழிலதிபர் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார்.

 

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார். அம்பானியின் கடந்தாண்டு சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் இந்தாண்டு 24 சதவிகிதம் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அம்பானிக்கு அடுத்ததாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக அதானி நிறுவனத்தின் கவுதம் அதானி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு 83 பில்லியன் டாலராக உள்ளது. கடந்தாண்டு மட்டும் அவரது சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் நைகா நிறுவனர் ஃபால்குனி  நாயர் பில்லியனர் வரிசையில் இணைந்துள்ளார்.

 

 

Next Story

27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பில்கேட்ஸ் - மெலிண்டா!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

bill gates- melinda

 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். இவரும் மெலிண்டாவும் 1987இல் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். மெலிண்டா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ப்ராடக்ட் மானேஜராக பணியில் சேர்ந்தார். இதன்தொடர்ச்சியாக இருவருக்குள்ளும் தொடங்கிய நட்பு 1994ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

 

இதன்பிறகு 27 ஆண்டுகள் நீடித்திருந்த இவர்களது திருமண உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பில் கேட்ஸும்  மெலிண்டாவும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். பில்கேட்ஸ்க்கு தற்போது 65 வயதாகிறது. மெலிண்டா கேட்ஸ்க்கு தற்போது 54 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி பொது சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் சேவையாற்றி வரும் நிலையில், இருவரும் பிரிவது பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனைப் பாதிக்குமா என கேள்வியெழுந்தது.

 

இந்தநிலையில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இருவரும், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமை பொறுப்பை வகிப்பார்கள் என அந்த ஃபவுண்டேஷனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசி பணிகளுக்கும் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.