Published on 20/09/2021 | Edited on 20/09/2021
இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் தினசரி கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. அம்மாநிலத்தில் குறைவதும், கூடுவதுமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு, அண்மையில் 20 ஆயிரத்தைத் தாண்டி அதிர்ச்சியளித்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகத் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் குறையத்தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 23,260 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், சனிக்கிழமையன்று 19,325 பெருக்கே கரோனா உறுதி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று 19,653 பேருக்கு காரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில் இன்று 15,692 பேருக்கு மட்டுமே கேரளாவில் கரோனா உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.