Published on 06/10/2021 | Edited on 06/10/2021

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் நேற்று முன்தினம் (04.10.2021) இரவு திடீரென முடங்கின. இதன்பிறகு அந்த வலைதள நிறுவனங்கள், தீவிரமான முயற்சிக்குப் பிறகு தங்களது தளங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தன. இந்தநிலையில், தற்போது பல வாடிக்கையாளர்களுக்கு ஜியோ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இணைய சேவையில் வாடிக்கையாளர்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். காலை 10 மணியிலிருந்து இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ சேவை பாதிப்பையொட்டி ட்விட்டரில் #jiodown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.