
சாலையில் இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங் மீது அமர்ந்து காதலனை கட்டியணைத்துக்கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து குண்டல்பேட்டைக்கு செல்லும் சாலையில் காதல் ஜோடி ஒன்று தன்னை மறந்து பைக்கில் சென்றனர். அவர்கள் சென்ற விதம் அங்கிருந்த வாகன ஓட்டிகளை சங்கடப்படுத்தியதால் தலையில் அடித்துக்கொண்டு சென்றனர். பெட்ரோல் டேங் மீது அமர்ந்துகொண்ட அந்த இளம்பெண் காதலனை கட்டியணைத்து கொண்டார். முன்னோக்கி வரும் வாகனங்களை சரியாக பார்க்கமுடியாதசூழலில் அதைப்பற்றி சிறிதும் கவலை இல்லாமல் பைக்கை காதலன் ஓட்டி செல்கிறார். இதனைக் கண்ட சிலர் அந்த காதல் ஜோடியை பின் தொடர்ந்து சென்று அதனை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து தாறுமாறாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற பயணம் அவர்களுக்கு மட்டுமல்லாமல் எதிரே வருபவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)