gujarat cm

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அம்மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி அண்மையில் பதவி விலகினார். இதனையடுத்து, பூபேந்திர படேல் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதன்தொடர்ச்சியாகமுற்றிலும் புதுமுகங்களைக் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

Advertisment

இந்தநிலையில், நேற்று (17.09.2021) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில அரசின் மரம் நடும் திட்டம் குறித்தும்பேசினார். அப்போது அவர், ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்துஆக்சிஜன் பெறுவதற்குப் பதிலாக, இயற்கையாக ஆக்சிஜன் பெறுவதற்காக மரங்கள் நடப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகஅவர் கூறுகையில், "மனித வாழ்வில் மரங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. உலகளாவிய கரோனா தொற்றுநோய் சுத்தமான ஆக்சிஜனின் முக்கியத்துவம் குறித்து நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜனைப் பெறுவதற்குப் பதிலாக, இயற்கையாக ஆக்சிஜனை வழங்கும் மரங்களை அதிகளவுநடுவதற்கு குஜராத்தில் மரம் நடும் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளார். பூபேந்திர படேலின்இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில்கிண்டலுக்குள்ளாகிவருகிறது.