Published on 14/11/2020 | Edited on 14/11/2020

தமிழகம், கர்நாடகா, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்பட நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

கோவா மாநிலம், பனாஜியில் நரகாசுரனின் உருவபொம்மையை எரித்து மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். இந்தியா- வங்கதேசம் எல்லையில் இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி தீபாவளியைக் கொண்டாடினர். அதேபோல், திரிபுரா மாநிலத்திலும் ராணுவ வீரர்கள் இனிப்புகளைப் பரிமாறி தீபாவளியைக் கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.