Skip to main content

ஹோண்டா கார்களின் விலையும் உயருகிறது

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

ஹோண்டா நிறுவனம், தனது நிறுவனத்தின் கார்களின் விலையை ஜனவரி மாதம் முதல் உயர்த்தபோவதாக அறிவித்துள்ளது. வாகன உற்பத்தி உள்ளீடு செலவ 4% உயர்ந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இன்னும் குறிப்பிட்ட விலையையோ அல்லது சதவீதத்தையோ அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. 

 

hh

 

 

ஏற்கனவே இதே காரணத்தினால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை 40,000 வரை உயரும் என அறிவித்திருந்தது. அதேபோல் நிசான் இந்தியா நிறுவனத்தின் கார்கள் 4% வரை விலை உயரும் என்றும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார்கள் 2.5% விலை உயரும் என்றும், ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை 3% விலை உயரும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கும் ஹோண்டா நிறுவனம்!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

Honda to launch electric vehicle

 

இந்தியாவில் ஹீரோ, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து ஹோண்டா நிறுவனமும் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகன தயாரிப்பில் களமிறங்கவுள்ளது. வரும் 2022- 2023 ஆம் நிதியாண்டில் தங்களின் நிறுவனத்தின் புதிய மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹோண்டா மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

 

மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பில் நுழைவது குறிப்பிடத்தக்கது. 

 

தற்போது, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோலின் விலை உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலானோர் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத்திற்கு மாறியுள்ளனர். மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியங்களை அளித்து வருகின்றன. 

 

இதனால், மின்சார வாகனங்களின் பயன்பாடு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Next Story

இங்கிலாந்தில் இருக்கும் ஹோண்டா ஆலை மூட முடிவு... ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதுதான் காரணமா...?

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இங்கிலாந்தின் ஸ்வின்டோன் எனுமிடத்தில் அமைந்திருக்கும் தனது உற்பத்தி ஆலையை வரும் 2021-ம் ஆண்டில் மூடப்போவதாக அறிவித்துள்ளது. 

 

Honda

 

ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஸ்வின்டோன் எனுமிடத்தில் இயங்கிவருகிறது. தற்போது இந்த ஆலையை வரும் 2021-ம் ஆண்டில் மூடப்போவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில், இந்த ஆலையில் மட்டுமே ஹோண்டா சிவிக் மாடல் கார்கள் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆலையில் 3,500 பேர் பணி புரிந்துவருகின்றனர். மேலும் இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 1,50,000.கார்கள் தயாரிக்கப்பட்டுவருகிறது. 

 

இதற்கு முன்னதாகவே நிஸான் நிறுவனம் தனது எக்ஸ் டிரெய்ஸ் எனும் எஸ்யுவி உற்பத்தியை கைவிட்டிருந்தது. இது பிரெக்ஸிட் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
 

ஆனால், ஹோண்டா நிறுவனத்தின் ஜப்பான் தலைவர் தாகஹிரோ ஹச்சிகோ, ஹோண்டா நிறுவனத்தின் இந்த முடிவு பிரெக்ஸிட் காரணமாக எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் மார்ச் 29-ம் தேதி வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.