அண்மையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அரசு சொத்துக்களை குத்தகைக்குவிடும் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் ''நாட்டின் அனைத்து சொத்துக்களையும் பாஜக விற்றுவிட்டது. அரசுக்கு சாதகமான தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பரிசாக அளிக்கிறார் பிரதமர். 42,000 கிலோ மீட்டர் தூர மின்தடங்களை தனியாருக்கு பிரதமர் தாரைவார்க்கிறார். பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்க மத்திய பாஜக திட்டமிட்டுள்ளது. பொதுச்சொத்துக்களை பணமாக்கும் திட்டம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்று வருகிறது. 25 விமான நிலையங்கள், உணவு தானியாக் கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ராகுல்காந்தி ஒரு டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பாஜகவின் வருமானம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் உங்களின் வருமானமும் அதிகரித்துள்ளதா?'' என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் பாஜக திரட்டிய நிதி 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதைச்சுட்டிக்காட்டி டிவிட்டரில் ராகுல்காந்தி இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.