ஜவுளி ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி, நாளை முதல் (ஜனவரி 1, 2022) ஐந்து சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படவிருந்தது. ஆனால் ஜவுளி ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த தமிழ்நாடு, குஜராத், மேற்குவங்கம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்தநிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜவுளி ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை தள்ளி வைக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் எதிர்ப்பையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜவுளி ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து பிப்ரவரி மாதத்தில் விவாதிக்கவும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஓலா, உபர் போன்ற போன்ற இணைய செயலிகளில் வாகனங்களை பதிவு செய்து பயணம் மேற்கொள்வதற்கு நாளை முதல் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.