Skip to main content

பெண்வேடமிட்ட கவுதம் கம்பீர்....

Published on 14/09/2018 | Edited on 14/09/2018
gautam


கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பெண் வேடம் இட்டு திருநங்கைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

 

டெல்லியில் திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹிஜாரா ஹப்பா’ எனும் விளையாட்டுப் போட்டி, கலைநிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கம்பீர் கலந்துகொண்டு செய்த செயல்தான் தற்போது வைரலாகியுள்ளது. பலரை நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா? திருநங்கைகளுடன் கலந்துகொண்டு தன்னை பெண்ணாக அலங்கரித்துகொண்டார். நெற்றியில் திலகமிட்டு, கையில் வளையல் அணிந்து, உதட்டில் சாயமிட்டு, துப்பட்டா அணிந்து பெண்ணாக மாறி விளையாட்டுப் போட்டிகளை கம்பீர் தொடங்கி வைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பியுமான கெளதம் கம்பீர் அதிரடி அறிவிப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Former cricketer and BJP MP Gautam Gambhir action announcement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் இன்று (02-03-24) திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, கவுதம் கம்பீர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் நான் கவனம் செலுத்துவதற்காக எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

விராட் கோலி, கம்பீர் இடையே வாக்குவாதம்; ஐபிஎல் நிர்வாகம் அதிரடி

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

ipl forty third leak match virat kohli versus gambir viral video 

 

16 வது ஐபிஎல் தொடரின் 43 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களம் கண்டன. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூரு அணி லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் மைதானத்தில் இரு அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றுக் கொள்வது வழக்கம். அவ்வாறு நேற்றைய போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் விடைபெறும்போது பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல், பெங்களூரு அணி கேப்டன் பாப் டூப்ளசிஸ் மற்றும் இரு அணிகளின் வீரர்களும் கோலி மற்றும் கம்பீர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஐபிஎல் நிர்வாகமானது விளையாட்டு மைதானத்தில் நடத்தை விதிகளை மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கம்பீருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. மேலும் போட்டியின்போது லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக் பேட் செய்த போது விராட் கோலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து  50 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.