Skip to main content

பசுக்களைப் பாதுகாக்க இத்தனை கோடியா...? இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

 

cc

 

2019-20-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மத்திய இரயில்வேத்துறை மற்றும் தற்காலிக நிதி அமைச்சருமான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் இடம் பெற்றது. அதில் ஒன்றாக நாட்டு பசு இனங்களின் பாதுகாப்புக்காக ரூ. 750 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

 

இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை, கால்நடை நலம் மற்றும் பராம்பரிப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்திற்காக கடந்த ஆண்டு ரூ. 301.5 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது என்பதும், இந்த ஆண்டு அது இரண்டு மடங்கு அளவிற்கு உயர்த்தி ரூ. 750 கோடி ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Cattle cart workers engaged in a waiting struggle on the Kollidam river

 

திருச்சி மாவட்டம் மாதவ பெருமாள் கோவில் மற்றும் தாளக்குடி மணல் குவாரிகளை நம்பி 2,408 மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் பிழைப்பை நடத்திவந்தனர். இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மணல் குவாரிகள் இயங்க அரசு தடை விதித்தது. மாட்டுவண்டி மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க அரசு காலதாமதப்படுத்தி வருவதால் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என கூறி பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். 

 

இதுவரை தமிழ்நாடு அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில், இன்று (30.09.2021) மூடப்பட்டுள்ள குவாரிகளில் மணல் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 600க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்து லால்குடி வட்டாட்சியர் சித்ரா, லால்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தாளக்குடி மற்றும் மாதவ பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி வழங்கும்வரை இந்த இடத்தைவிட்டு கலைந்து செல்லப் போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

Next Story

“எங்களது கோரிக்கையை ஏற்க மறுத்தால் மாடுகளை நரபலி கொடுக்க அனுமதிக்க வேண்டும்” - மாட்டு வண்டி தொழிலாளர்கள்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

"If we refuse to comply with our request, we must allow the cows to be..." - Cattle cart workers

 

தமிழ்நாடு விவசாயிகளின் திருச்சி மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று (02.08.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரியை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் தாளக்குடி மாதவப் பெருமாள் கோவில் மாட்டுவண்டி மணல் குவாரியைத் திறக்க வேண்டும். மேலும், மூன்று மாதமாக போராட்டம் நடத்தியும் தங்களை தமிழ்நாடு அரசு வஞ்சித்துவருவதாகவும், மூன்று மாதமாக இந்தத் தொழிலை மட்டும் நம்பியிருக்கக் கூடிய குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளோம்.

 

எனவே, “தமிழ்நாடு அரசு உடனடியாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எங்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்தால் 5,000 மாடுகளை நரபலி கொடுக்க அனுமதி வழங்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நீர்வள, கனிமவளத்துறை அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், பொதுப்பணித்துறைக்கும் பல கடிதங்கள் எழுதியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக தமிழ்நாடு அரசு இந்த மனுக்களை ஏற்று அனுமதி வழங்கிட வேண்டும். அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எங்களைத் தள்ளிவிடாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.