Skip to main content

புதுவை பைனான்சியர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது!!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

 புதுவை பைனான்சியர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  

புதுச்சேரி வில்லியனூர் அருகிலுள்ள கோட்டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அப்பகுதியில் வட்டிக்கு கடன் அளித்து வந்த இவர் நேற்று இரவு வில்லியனூர் திரையரங்கில் படம் பார்க்க சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் கோட்டைமேடு சுடுகாட்டு பகுதியில்  தலையில் கல்லால் அடித்து அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து வில்லியனூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

 

murder

 

அதே ஊரை சேர்ந்த பலருக்கு லட்ச கணக்கில் ராமலிங்கம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகம் கொண்டிருந்த நிலையில் கொலை நடந்த இடத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா விசாரணை நடத்தினார்.

 

பின்னர் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில்  இந்தக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து ஓட்டுநர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் சபரி, சக்தி நடராஜன் என நான்கு பேரை கைது செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

“தேர்தலை புறக்கணிக்கிறேன்” - அதிமுக வேட்பாளர் ஆவேசம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"I will boycott the election" - AIADMK candidate's obsession

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்கிற்கு ரூ. 500, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் ரூ. 200 கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை கொச்சைப்படுத்தும் தேர்தலாக மீண்டும் மாற்றி விட்டனர். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இந்த தேர்தல் அடுத்து வரும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டிய ஒரு தேர்தல் ஆகும். மீண்டும், மீண்டும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றிகொண்டு தான் இருப்பேன் என்று நினைக்கிறார்கள். எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.