Published on 29/03/2021 | Edited on 29/03/2021
![jh](http://image.nakkheeran.in/cdn/farfuture/k9DnoQkJnGHIfb8dTkqepmiXZPAi-x3ammqD84NdsUM/1616987957/sites/default/files/inline-images/312_29.jpg)
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். 130 நாட்களைக் கடந்தும் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இந்நிலையில், வட மாநிலங்களில் தற்போது ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்து, ‘இதுவே எங்களுடைய சிறப்பான ஹோலி பண்டிகையாக நினைக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்கள்.