/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dqw_1.jpg)
உலகின் நம்பர் 1 பணக்காரரானஎலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது மின்சார வாகனங்களைவிற்பனை செய்ய விரும்புகிறது. இந்த வருடத்திற்குள் இந்தியாவில் விற்பனையை தொடங்க நினைக்கும் அந்தநிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகமாக உள்ளதென்று கருதுவதாககூறப்படுகிறது.
இந்தநிலையில்டெஸ்லா நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு தலைவர்மனுஜ் குரானா உள்ளிட்ட டெஸ்லா நிறுவன அதிகாரிகள், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க கோரி பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியாவின் வரி விகிதகட்டமைப்பு, இங்கு தங்களது வணிகத்தை லாபகரமானதாக ஆக்காது என டெஸ்லா அதிகாரிகள் தெரிவித்ததாகவும், எலான் மஸ்க் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் இதற்குபிரதமர் அலுவலகம் அளித்த பதில் குறித்து சரியான தகவல் இல்லை. இந்தியாவில் 40 ஆயிரம் டாலர்கள் அல்லது அதற்கும் குறைவான மின்சார வாகனங்களுக்கு 60 சதவீத இறக்குமதி வரியும், 40 ஆயிரம் டாலர்களுக்கு மேலான மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியும்விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)