Skip to main content

நடைபயிற்சி சென்ற நீதிபதி திட்டமிட்டு கொலை... வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

District judge incident while walking ...  CCTV footage released!

நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் வாயிலாக உறுதியாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் நடைபயிற்சிக்காகச் சென்ற மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்தின் உடல் சாலையோரம் கண்டறியப்பட்டது. அதிவேகமாக வந்த வாகனங்கள் இடித்து, அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் முதலில் கருதினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்துக்கு மிக நெருக்கமாகச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம், அவரை இடித்துவிட்டு அதிவேகமாக அங்கிருந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

Look how additional district & sessions Judge, Dhanbad Uttam Anand was murdered.

An auto intentionally went to the side of road and hit him.

Twitter pe kaam ki baat ka dhong karne wale @HemantSorenJMM ke state mei law and order ka haal ye hai. pic.twitter.com/1g95MKX8dT
— Ankur (@iAnkurSingh) July 28, 2021

அதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி உயிரிழந்ததைக் கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்த காவல்துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதனிடையே, மாவட்ட நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டறிந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று (29/07/2021) விசாரணை நடைபெறுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.