இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட இராணுவ பீரங்கியான தனுஷ், தற்போது அதன்இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த பீரங்கி இராணுவத்தில் சேர்க்க தயாராகிவிட்டது என்று இராணுவஉயரதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisment

army

இந்த பீரங்கி முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. இதுபோன்ற இராணுவ உபகரணங்கள், இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்துதான் அதிகப்படியாக கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் இறுதிக்கட்ட சோதனை ராஜஸ்தான் பாலைவனத்தில் இருக்கும் பொக்ரான் பகுதிகளை நடைபெற்றுள்ளது.

Advertisment

இதுகுறித்து பீரங்கி தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் மேலாளர் எஸ்.கே சிங் கூறியுள்ளதாவது, " இதுவரை ஆறு தனுஷ் பீரங்கிகள் இறுதி கட்ட சோதனையில் வெற்றிகரமாக இலக்கை சரியாக தாக்கியுள்ளன" என்றார். இறுதிக்கட்ட சோதனையில் வெற்றிபெற்றதால் இராணுவத்தில் தனுஷை சேர்க்கலாம் என்று இராணுவ உயரதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.