உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 29 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும்கரோனாஇரண்டாம் அலை காரணமாக தற்போது கரோனாபரவல் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் அலையின்போது எடியூரப்பாவுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,தற்போதுஇரண்டாம் முறையாக அவருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டு, மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காங்கிரஸின்தேசிய செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.