CBSE 12 MARKS RELEASE FOR TODAY

Advertisment

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று (30/07/2021) பிற்பகல் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ (CBSE) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் தலா 30%, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% என மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், "சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்" என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள், பின்னர் நடக்கும் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.