Skip to main content

அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து - ஆந்திர அரசு அதிரடி

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

Jagan Mohan Reddy

 

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ஆந்திர அரசு ரத்து செய்துள்ளது.

 

மின் உற்பத்திக்காக நிலக்கரி கொள்முதல் செய்ய ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. அதேபோல 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் அகர்வால் நிறுவனமும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பங்கேற்றன. இந்த ஏலத்தில் அகர்வால் நிறுவனம் டெண்டர் கோரிய தொகை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைவிட அதிகமாக இருந்ததால் 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஒப்பந்தமும் அதானி நிறுவனம் வசமானது. 

 

இரு டெண்டர்களும் அதானி நிறுவனத்திற்கு சென்ற நிலையில், அதிக விலை நிர்ணயித்ததாகக் கூறி இரு டெண்டர்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்