Skip to main content

மருத்துவமனையில் அமைச்சர்களுடன் கூட்டம்...

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
aims


கோவா முதல்வர் மனோகர் பரிகர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதித்த பின்னர், கோவாவில் வேறு ஒருவரை பொறுப்பு முதல்வராக பதவி ஏற்பார்கள் என்றும். சிலர் பாஜக ஆட்சியே கலைக்கப்படும் என்றும் பேசப்பட்டது. ஆனால், மனோகர் பரிகரே கோவாவில் தொடர்ந்து முதல்வராக இருப்பார் என்று பாஜக தலைவர் அமித்ஷா முற்றுபுள்ளி வைத்தார்.
 

இந்நிலையில், மனோகர் பரிகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கோவா மாநில அமைச்சரவை கூட்டத்தில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்களிடம் கோவாவில் இருக்கும் நிலையை குறித்து கலந்துறையாட உள்ளார். இந்த நிகழ்வில் பாஜகவுடன் இணைந்து செயலாற்றும் மூன்று கூட்டணி கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் மனோகர் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பகவத் கீதை மதநூல் அல்ல - ஹரியானா முதல்வர் கருத்து!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

ஹரியானாவில் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த, ஹரியானா மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார் பகவத் கீதை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். மேலும் பகவத் கீதை ஒன்றும் மத நூல் அல்ல. அது வாழ்க்கையின் சாராம்சங்களை விளக்கும் நூல் என்று தெரிவித்துள்ளார். பள்ளிக்குழந்தைகளின் பாடத்திட்டத்தில் இவை அவர்களுக்கு புரியும்படி சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்காக இலகுவான ஸ்லோகங்கள் மாநிலத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். 



தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்த போதெல்லாம், இந்தியின் வழியாக சமஸ்கிருதத்தை நுழைக்க பாஜக முயற்சி செய்கிறது என்பதே பலரின் குரலாக இருந்தது. ஆனால், தற்போது நேரடியாக பள்ளிகளுக்குள் பகவத்கீதையை கொண்டு செல்ல முயற்சி செய்கிறது பாஜக அரசு.அண்மையில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கட்டாயப்ப்பாடமாக பகவத் கீதை சேர்க்கப்பட்டதும், கடும் எதிர்ப்புக்குப் பிறகு அது விருப்பப்பாடம் என்று மாற்றப்பட்டதும் கூட தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

 

Next Story

நடு இரவில் கோவா மாநிலத்தில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு...

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஞாயிறு இரவு உயிரிழந்தார்.

 

goa cm

 

மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வராக யார் பதவியேற்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) சட்டமன்ற உறுப்பினரான சுதின் தவாலிகர், முதலமைச்சராக முயற்சிகள் செய்தார். தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்நிலையில் கோவா பாஜக வை சேர்ந்த வினய் டெண்டுல்கர் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு 2 மணிக்கு கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் என்ற ராமகிருஷ்ண தாவில்கர், கோவா பார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் ஆகிய இருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்தபோது துணை முதல்வர்கள் இல்லாத நிலையில் தற்போது முதல்வர் பதவிக்காக கடும் போட்டி நிலவியதை அடுத்து துணை முதல்வர் பதவி இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.