Skip to main content

கோவாவில் பாஜக காங்கிரஸ் கடும் போட்டி... திணறும் ஆம் ஆத்மி!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

BJP-Congress tough competition in Goa ... Aam Aadmi Party suffocating!

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

காலை  10 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 236 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி- 100 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-06 இடங்களிலும், காங்கிரஸ்-04 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 84 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், அகாலிதளம் 08 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 02 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது. பஞ்சாப்பில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 பேரவை தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளார்.

 

உத்தரகாண்ட், மணிப்பூரில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் கோவாவில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காலையிலிருந்து பாஜக முன்னிலை வகித்த நிலையில் தற்பொழுது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ்-15 இடங்களிலும், பாஜக-14 இடங்களிலும், திரிணாமுல்-05 இடங்களிலும், ஆம் ஆத்மி 01 இடத்திலும், மற்றவை- 03 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் ஆம் ஆத்மி கோவாவில் 01 இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் அங்கு மற்றவை 03 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்