Skip to main content

தலைமை தளபதி பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அறிக்கை தாக்கல்!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

bipin rawat

 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உயிரிழந்தார்.

 

இதற்கிடையே இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் முப்படை விசாரணை குழு, விபத்து தொடர்பான விசரணை அறிக்கையை பாதுகாத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்து, அந்த அறிக்கை குறித்து விரிவான விளக்கம் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் இந்த விசாரணை அறிக்கையில், விபத்துக்கான காரணம் மட்டுமின்றி இனி விஐபிக்களின் வான்வெளி பயணத்தை பாதுகாப்பாக்க பரிந்துரைகளைசெய்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்