
இந்தியாவில் கரோனாபரவல் மோசமடைந்துள்ளநிலையில், கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கரோனாவை கட்டுப்படுத்துவதில்கடைசி வாய்ப்பாகத்தான் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், கரோனாபாதிப்பு தீவிரமானதால், டெல்லி, கர்நாடகா, ஒடிஷா, மஹாராஷ்ட்ராஉள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
ஆந்திராவில், மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்குஅமல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில், தற்போது பீகார் மாநிலத்திலும்மே 15ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகஅம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு விதிமுறைகளை வகுக்கவும், அவற்றைக் கையாளவும் குழு ஒன்றை நிதிஷ் குமார் அமைத்துள்ளார்.
முன்னதாகபாட்னா உயர் நீதிமன்றம், பீகார் அரசு கரோனா நிலையைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், கரோனாதடுப்பு நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு எனவும்விமர்சித்ததோடு, இப்போது முழு ஊடங்கு தேவையென்றும், அரசு அமல்படுத்தாவிட்டால்அதற்கான உத்தரவை தாங்கள் பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)