Skip to main content

இதற்கும் இனி பான் எண் கட்டாயம்... வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதி அமைச்சகம் நிபந்தனை!

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Ban number is mandatory for this too ... Ministry of Finance condition for bank customers!

 

மத்திய நிதி அமைச்சகம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. வங்கி கணக்கில் ஓர் ஆண்டில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ ஆதார் மற்றும் பான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என மத்திய அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வங்கிகளில் நடப்பு கணக்கு தொடங்குவதற்கும் பான் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அனைத்தும் வரும் 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. வங்கிக்கணக்குகள் மட்டுமல்லாது அஞ்சலகங்கள், கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இந்த புதிய அறிவிப்பு பொருந்தும் என மத்திய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கு மேல் டெபாசிட் செய்வதற்கு பான் எண்  கட்டாயம் என்கிற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்