கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகநாடு முழுவதும்கரோனாதடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்குக் கரோனாதடுப்பூசி போடப்படும் திட்டமானது முதற்கட்டமாகஅமல்படுத்தப்பட்ட நிலையில், இன்றிலிருந்து (01.03.2021) 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கரோனாதடுப்பூசிசெலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல்தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும்அறிவிக்கப்பட்டிருந்தது. தகுதியான அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கோவாக்சின் கரோனா தடுப்பூசியைப் பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார். புதுச்சேரியைச் சேர்ந்தநிவேதாஎன்ற செவிலியர் கரோனாதடுப்பூசியைப்பிரதமர்மோடிக்குசெலுத்தினார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த செவிலியர் நிவேதா, “கரோனா தடுப்பூசி போடும்போது ‘எங்கிருந்து வருகிறீர்கள்’ எனபிரதமர் மோடிகேட்டார்.கரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டதைச் சொன்ன பொழுது, ‘வலியேதெரியவில்லை’ எனமோடி கூறினார்” என்றார்.