Skip to main content

அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

ANNA HAZARE

 

கடந்த 2011 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அன்னா ஹசாரே. இந்தநிலையில் தற்போது அன்னா ஹசாரே நெஞ்சு வலி காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏழை சிறுவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்த சமூக ஆர்வலர்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 social activist who bought new clothes for poor childrens

 

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் தன்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்து வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளுக்குப் புத்தாடைகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு, வேலூரில் நிரந்தர வீடு கூட இல்லாமல் வாசிக்கும் 11 நரிக்குறவர் குழந்தைகளை வேலூரில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்து வந்தார்.

 

அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த உடைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்ல, ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்த குழந்தைகள் தங்களுக்கான உடைகளை அவர்களே தேர்வு செய்து புதுவித அனுபவத்தைப் பெற்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இவர்களும் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்து வருவதாக அன்பரசன் தெரிவித்தார்.  

 

 

Next Story

“காலம் சற்றே உறைந்து நிற்காதா” - முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Doesnot time freeze a bit Chief Minister M. K. Stalin's resilience

 

மதுரை மாவட்டம் தத்தநேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூக நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறை கட்டடங்கள், இறை வணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துத் தந்துள்ளார்.

 

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளைக் கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்துத் தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி, அவரது சமூக நலப் பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்து கலைஞரின் உருவச் சிலையையும் வழங்கி சிறப்பு செய்தார்.

 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரனைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால் பேசப்படும் என்பது உறுதி. அவர் போன்ற மனிதர்களோடு உறவாடும் நேரங்களில் காலம் சற்றே உறைந்து நிற்காதா” எனத் தெரிவித்துள்ளார்.