Published on 17/05/2021 | Edited on 17/05/2021
![andhra lockdown](http://image.nakkheeran.in/cdn/farfuture/EBg2xphYSr45oQy6nNt_0y-vwE2JDnQEbqhRdrOHQ7w/1621243653/sites/default/files/inline-images/New%20Project%20%287%29_0.jpg)
இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆந்திராவிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மக்கள் பொருட்கள் வாங்க, காலை 6 மணிமுதல் 12 மணிவரையும், அதன்பிறகு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கரோனா பரவல் குறையாததால் ஊரடங்கை வருகிற 31ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஆந்திர அரசு. மேலும் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.