பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். நீண்ட காலம் முதல்வராக இருந்தவர், காங்கிரஸ் கட்சியின் தலைமை கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தன்னுடைய முதல்வர் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார். மேலும், ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தலைமையைக் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்துவை கடுமையாக சாடினார். இருந்தபோதிலும் தான் தற்போதுவரை காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் இன்று (28.09.2021) டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு நடைபெற்றால் விரைவில் அவர் பாஜகவில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாப் பாஜக வலிமை இல்லாமல் இருந்துவரும் தற்போதைய சூழ்நிலையில், அமரீந்தரை பாஜக அரவணைக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.