Skip to main content

அக்னி 4 ஏவுகணை பரிசோதனை வெற்றி! 

 

Agni 4 missile test successful!

 

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. 

 

ஒடிஷா மாநிலம், பாலசோரில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி 4 ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாக தாக்கி அழித்தது. தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ள அக்னி 4 ஏவுகணை 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமைப் பெற்றது என ராணுவ அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.